"உண்மையின் முன்னால் நடுநிலைமை என்பதில்லை"
பத்திரிகைகள் சமூகப் பொறுப்புள்ளவை. சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்யவேண்டிய கடமையினைத் தம்மகத்தே கொண்டவை. சமூகப் பொறுப்புள்ள பத்திரிகையாளர் எவரும் பத்திரிகையினை வெறும் வியாபாரமாகக் கருத முடியாது. எமது தாயகத்திலே உன்னதமான விடுதலைப் போராட்டத்திலே போராளிகளும் மக்களும் குதித்துள்ள இவ்வேளையில் அப்போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் செயற்படவேண்டியது தமிழீழ மக்கள் மத்தியிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு பத்திரிகையினதும் கடமையாகின்றது. இதனால் நடுநிலமை என்று போலி முகம் காட்ட நாம் விரும்பவில்லை.
உண்மையில் நடுநிலமை ஒன்று இருக்க முடியாது. ஒவ்வொரு பத்திரிகையும் செய்தியினையும் ஏனைய ஆக்கங்களையும் வெளியிடும் வித்திலேயே அதனது சார்புத் தன்மை தெரிந்துவிடும். இந்தவகையில் ஈழமுரசு என்றும் போராட்டத்தின் பக்கமே |